நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருட்டு நடந்துள்ளதாக கடந்த மாதம் 27ஆம் தேதி தேனாம்பேட்டைபோலீசில் புகார் அளிக்கப்பட்டது.
சென்னையில் உள்ள அவரது வீட்டில் 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் திருடு போனது. இந்த நிலையில், அவரது வீட்டில் வேலை பார்த்து வந்த பணிப்பெண் ஈஸ்வரி என்பவர் நகைகளை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.
சென்னையில் உள்ள அவரது வீட்டில் 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் திருடு போனது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் 381 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
ஐஸ்வர்யா வீட்டில் பணியாற்றி வந்த ஈஸ்வரி, லட்சுமி, வெங்கட் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் திட்டமிட்டு லாக்கர் சாவியை எடுத்து நகைகளை ஈஸ்வரி திருடியது தெரியவந்தது.
தற்போது லால் சலாம் படப்பிடிப்பிற்காக ஐஸ்வர்யா, தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து வருகிறார். அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் இந்த திருட்டு நடந்ததாக தெரிகிறது.

